முயல் வளர்ப்பு in Tamil

முயல் வளர்ப்பு.. முழுமையாக முயற்சித்தால்.. முத்தான வருமானம்


இறைச்சிக்கான கால்நடை வளர்ப்புத் தொழிலில் இறங்கி, கையைச் சுட்டுக் கொண்டவர்கள் பலர்  உண்டு. குறிப்பாக, முயல் வளர்ப்பில் இறங்கிய பல விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்ததால், முயல் வளர்ப்பு, என்றாலே பலரும், வேண்டாம் என்றுதான் துள்ளி ஓடுவார்கள் முயலைவிட வேகமாக. ஆனால், இவர்களுக்கு மத்தியில் மிகுந்த முனைப்புடன் முயல் வளர்த்து, அதில் நல்ல லாபமும் ஈட்டி வருகிறார், விழுப்புரம் மாவட்டம், வித்யா நகரைச் சேர்ந்த முரளிதரன். எங்கப்பா லேப் டெக்னீசியன் வேலை பார்த்தாலும்.. விவசாயத்தை விடாமல் செய்து கொண்டிருந்தார். அந்த வருமானத்தில்தான் என்னை இன்ஜினீயரிங் படிக்க வைத்தார். படிப்பை முடித்துவிட்டு,ஹரிகோட்டாவில் இருக்கும் ‘இஸ்ரோ’ நிறுவனத்தில்.. விஞ்ஞானியாக 16 வருடம் வேலை பார்த்தேன்.

பிறகு, சவுதி அரேபியாவில் ஏழு வருடம் வேலை பார்த்தேன் அதன் பிறகு இந்தியாவிற்கே திரும்பிவிட்டேன். மூன்று வருடமாக ஒரு தொண்டு நிறுவனத்தை நடத்தி கொண்டு வருகிறேன். அதன் மூலமாக, கல்வராயன் மலையில் இருக்கும் மலைவாழ் மக்களுக்கு, சில உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறோம். இதற்கு நடுவில் இணையதளம் மூலமாக முயல் வளர்ப்பைப் பற்றித்  தெரிந்து கொண்டேன். அதற்காக, கொடைக்கானலில் இருக்கும் மத்திய செம்மறி ஆடுகள் மற்றும் ரோம ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி எடுத்து கொண்டேன். ஆரம்பத்தில், 10 முயல்களை வாங்கி வளர்க்க ஆரம்பித்தேன். மூன்று வருடத்தில் 1,500 முயல்கள் கிடைத்தது. அதில் ஆயிரம் முயலை விற்றுவிட்டேன். இப்போது 500 முயல்களை வைத்திருக்கிறேன் என்றார்.

இன விருத்தி அதிகம்!
சாப்பிடும் உணவை, கறியாக மாற்றும் திறனும், இன விருத்தியும்.. மற்ற விலங்குகளை விட முயலுக்கு அதிகம். முயலை நம்ம வசதியைப் பொருத்து, எந்த இடத்தில் வேண்டும் என்றாலும் வளர்க்கலாம். நான் என்னோட வீட்டைச் சுற்றிக் கூண்டு வைத்து வளர்க்கிறேன். முயல் கறி, சாப்பிட்ட உடனே ஜீரணமாயிடும். இந்தக் கறியில் குறைவான கொழுப்பு, அதிக புரதம், குறைந்த கலோரிதான் இருக்கு. முயல் கறி மிருதுவாக, சுவையாக இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் எல்லோருமே சாப்பிடலாம். இவ்வளவு இருந்தும், யாரும் இந்தத் தொழிலுக்கு வருவதில்லை என்பதுதான் ஆச்சரியம்.

இதை விற்க முடியாது என்றுதான் நிறைய பேர் காரணம் சொல்றாங்க. என்னோட அனுபவத்தில் விற்பனை ஒரு பிரச்சினையே இல்லை. தமிழ்நாட்டில் போதுமான அளவிற்கு முயல் இல்லை. எந்தப் புதுப்பொருளாக இருந்தாலும் அதைச் சாப்பிட்டு ருசி பார்த்தால்தான்.. அடுத்தடுத்து சாப்பிடத் தோன்றும். நம்ம ஊரில் ஆட்டுக்கறி, கோழிக்கறி கிடைக்கும் அளவிற்கு முயல் கறி கிடைப்பதில்லை. அதனால் மக்கள் வாங்கி சாப்பிடுவதில்லை. அதில்லாமல், முயல் மென்மையான, சாதுவான பிராணி. அதனால், அதைக் கொன்று சாப்பிடுவது பாவம் என்ற எண்ணமும் இருக்கு. அதனால்தான் பயன்பாடு குறைவாக இருக்கு. விழுப்புரத்தில் ஒரு ஹோட்டலில் நான் ஆர்டர் கேட்ட போது தினம் 5முயல் உங்களால் கொடுக்க முடிந்தால் நாங்க முயல்கறி பிரியாணி போடத் தயார் என்று சொன்னாங்க. ஆனால், அந்தளவிற்கு என்னால் கொடுக்க முடியாது என்பதுதான் உண்மை.

விற்பனைக்கு உதவி செய்வேன்!
வளர்ப்புக்கு இனப்பெருக்கத்திற்கு, சோதனைக் கூடங்களுக்கு கறிக்கு என்று பலவகையிலும் முயல்களுக்குத் தேவை இருந்துக் கொண்டுதான் இருக்கு. என்கிட்ட இருக்கும் ஆர்டருக்கே என்னால் சப்ளை செய்ய முடிவதில்லை. முயல் வளர்த்துக் கொண்டு இருப்பவங்களுகத் தேவையான ஆலோசனை கொடுக்கவும், விற்பனை செய்து கொடுக்கவும் நான் தயாராக இருக்கிறேன் என்றார்.

மூன்று மாதங்களில் 3 கிலோ!
முயலின் ஆயுட்காலம் 12 ஆண்டுகள். இன விருத்திக்காக வளர்க்கும் போது, 5 ஆண்டுகள் வரை வளர்ப்பதுதான் சிறந்தது. வெள்ளை ஜெயன்ட், சாம்பல் ஜெயன்ட், சோவியத் சின்சிலா, நியூசிலாந்து வெள்ளை ஆகிய ரகங்கள் வளர்ப்பிற்கு ஏற்றவை. இவை மூன்று மாதங்களில் 2 கிலோ முதல் 3 கிலோ அளவிற்கு வளரக் கூடியவை.

வலை கவனம்!
கொட்டகைக்கு அதகிச் செலவு செய்யாமல், வீட்டைச் சுற்றி நிழலுள்ள இடங்களில் கூண்டுகளை அமைத்து முயல் வளர்க்கலாம். ஒரு முயலுக்கு நான்கு சதுரடி இடம் தேவை. அதாவது, இரண்டடிக்கு இரண்டடி என்ற அளவில் கூண்டு இருக்க வேண்டும். தனித்தனியாக  கூண்டு செய்யாமல், பத்தடி நீளம். நான்கடி அகலம், அதை இரண்டு இரண்டு அடியாகப் பிரித்துக் கொண்டால்... செலவு குறையும். இது வளரும் முயல்களுக்கான கூண்டு.
குட்டி ஈனும் முயலுக்கு... இரண்டரை அடி சதுரம், ஒன்றரை அடி உயரத்தில் இதேபோல் கூண்டுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். கூண்டுக்கு 14 ‘கேஜ்’ கம்பிகளைப் பயன்படுத்தினால், முயலுக்கு காலில் புண்கள் உண்டாகாது. அதேபோல் தண்ணீருக்கு ‘நிப்பில்’ அமைப்பை அமைத்து விட்டால்.. தண்ணீர் வீணாகாது.

ஒரு யூனிட்டுக்கு 10 முயல்!
சினை முயல் ஒன்று, பருவத்திற்கு வந்த இரண்டு பெட்டை முயல்கள் (4 மாதம் வயதுடையவை), 6 மாத வயதுடைய ஒரு ஆண், ஒரு கிலோ அளவுடைய இரண்டு ஆண் முயல்கள், நான்கு பெட்டைக் குட்டிகள் என ஏழு பெண் முயல்கள், மூன்று ஆண் முயல்கள் என பத்து முயல்களை கொண்டது ஒரு யூனிட். முயல் வளர்ப்பில் இறங்குபவர்கள், ஒரே வயதுடைய முயல்களை வாங்கி வளர்க்கும் போது, வளர்ப்பு நிலை தெரியாமல் கஷ்டப்படுகிறார்கள். இந்த முறையில் வளர்க்கும் போது, 3 மாதங்களில் அனைத்து நிலைகளையும் கடந்து விடலாம். ஒரு யூனிட் முயல்களை, ஒரு கூண்டுக்கு ஒரு முயல் எனத் தனித்தனியாக விட்டுவிட வேண்டும்.

15 நாட்களுக்கு ஒரு முறை பருவம்!
முயல், ஐந்து மாத வயதில் பருவத்திற்கு வரும். பெண் முயலின் பிறப்புறுப்பு சிவந்து தடித்திருப்பதைப் பார்த்து பருவமடைந்ததைக் கண்டுபிடித்து விடலாம். அதன் பிறகு, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை தொடர்ந்து பருவத்துக்கு வரும். பருவம் வந்த பெண் முயலை, ஆண் முயல் இருக்கும் கூண்டுக்குள் விட வேண்டும். விட்ட ஓரிரு நிமிடங்களில் இனச்சேர்க்கை நடந்து விடும். பிறகு, பெண் முயலை அதனுடைய கூண்டில் விட்டுவிட வேண்டும். இன விருத்திக்காக ஆணுடன், பெட்டையைச் சேர்க்கும் போது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முயல்களாக இருக்கக் கூடாது. அப்படி இருந்தால், மரபு ரீதியான குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.ஆணுடன் சேர்ந்த 15 நாட்கள் கழித்து, பெண் முயலின் அடி வயிற்றைத் தடவி பார்த்தால் குட்டி தென்படும். உடனே, சினை முயலுக்கான கூண்டுக்கு மாற்றிவிட வேண்டும். குட்டி உருவாகவில்லையெனில், மீண்டும் அடுத்த பருவத்தில் இனச்சேர்க்கை செய்ய வேண்டும்.

ஆண்டுக்கு 8 முறை குட்டி!
குட்டி ஈனும் கூண்டில் தனிப்பெட்டி வைத்து, அவற்றில் தேங்காய் நார் கழிவுகளை வைக்க வேண்டும். முயலின் சினைக்காலம் முப்பது நாட்கள். ஆண்டுக்கு 6 முதல் 8 முறை குட்டி ஈனும். குட்டி ஈன்ற உடனே அடுத்த சினைக்குத் தயாராகி விடும். அடுத்தப் பருவத்திலேயே மீண்டும் இனச்சேர்க்கை செய்யலாம். முதல் ஈற்றில் மூன்று குட்டிகள் வரைதான் கிடைக்கும். அடுத்தடுத்து குட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்து, ஒரு ஈற்றில் 5 முதல் 9 குட்டிகள் வரை கிடைக்கும். பிறந்த குட்டியின் எடை 60 கிராம் இருக்கும். குட்டிகள் ஒரு மாதம் வரை தாயிடம் பால் குடிக்கும். அதன் பிறகு குட்டிகளைப் பிரித்து விட வேண்டும். முதலில் தாய் முயலைப் பிரித்து விட்டு, ஐந்து நாட்கள் கழித்து குட்டிகளை இடம் மாற்ற வேண்டும். பால் குடிக்கும் பருவத்தில் ஒரு குட்டி 750 கிராம் அளவிற்கு வந்துவிடும். தொடர்ந்து தீவனம் கொடுத்து வரும்போது, நான்கு மாதங்களில் இரண்டு கிலோ அளவிற்கு எடை வந்துவிடும்.

பசுந்தீவனமாக தட்டைச்சோளம்!
முயலுக்கு அருகம்புல், வேலிமசால், அகத்தி, மல்பெரி இலைகள், தட்டைச்சோளம் ஆகியவற்றைப் பசுந்தீவனமாகக் கொடுத்து வளர்க்கலாம். அடர் தீவனமாக கடையில் கிடைக்கும் தீவனங்கள் விலை அதிகமாகவும், தரமில்லாமலும் இருக்கின்றன. அதனால், நாமே அடர் தீவனத்தைத் தயாரித்துக் கொள்ளலாம். பருவமடைந்த முயல் ஒன்றுக்கு தினமும் 250 கிராம் பசுந்தீவனமும், 100 கிராம் அடர் தீவனமும் கொடுக்க வேண்டும். குட்டி ஈன்ற முயலுக்குத் தினமும் 150 கிராம் அடர் தீவனமும், 250 கிராம் பசுந்தீவனமும் கொடுக்க வேண்டும். குட்டிகளுக்கு 50 கிராம் அடர் தீவனமும், 100 கிராம் பசுந்தீவனமும் கொடுக்க வெண்டும். முயல்கள் பகல்வேளைகளில் தூங்கும் பழக்கம் கொண்டவை. அதனால், காலை ஏழு மணிக்கு மொத்தத் தீவனத்தில் கால் பங்கு, இரவு ஏழு மணிக்கு முக்கால் பங்கு என பிரித்துக் கொடுக்க வேண்டும்.

ஆண்டுக்கு 210 முயல்கள்!
ஒவ்வொரு முயலும் சராசரியாக வருடத்திற்கு ஆறு முறை குட்டி போடும். ஒவ்வொரு முறையும் சராசரியாக 5 குட்டிகள் என்று வைத்துக் கொண்டால், ஒரு யூனிட்டில் இருக்கும்  ஏழு பெண் முயல்கள் மூலமாக வருடத்திற்கு 210 குட்டிகள் கிடைக்கும். நான்கு மாதம் கழித்து விற்கும்போது, ஒரு முயல் சராசரியாக இரண்டு கிலோ இருக்கும். சராசரியாக ஒரு கிலோவிற்கு 175 ரூபாய் விலை கிடைக்கிறது. ஒரு முயல் 350 ரூபாய் என்று 210 முயல்களையும் விற்கும்போது.. 73 ஆயிரத்து 500 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதில், தீவனம், மருத்துவச் செலவு, பராமரிப்புக்கு 52 ஆயிரத்து 800 ரூபாய் போக 20 ஆயிரத்து 700 ரூபாய் லாபம். இது, பத்து முயல்கள்  அடங்கிய  ஒரு யூனிட்டிற்கான கணக்கு. ஆடு கோழி வளர்ப்பைவிட இதில் லாபம் குறைவாக இருப்பது போல் தோன்றலாம். ஆனால் இதில் பராமரிப்பு குறைவு. அதாவது, இதற்காக நீங்க செலவிடும் நேரம் மிகவும் குறைவாகத்தான் இருக்கும். பகுதி நேர வேலையாகவே இதைச் செய்யலாம். அதேபோல் நோய் தாக்குதலும் அதிகம் இருக்காது.

5 யூனிட்டால்... அதாவது 50 முயல்களைக் கொண்டு பண்ணையைத் தொடங்கினால், வருடத்திற்கு 1 லட்ச ரூபாய்க்கும் மேல் லாபம் கிடைக்கும். சினை முயலாக விற்றால், ஒரு முயல் 600 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய் வரை விற்பனை ஆகும். சோதனைக் கூடங்களுக்கு விற்றால், ஒரு முயலை 1,500 ரூபாய் வரைக்கும்கூட  விற்க முடியும் என்றார்.

இப்படித்தான் அடர்தீவனம் தயாரிக்கணும்.
மக்காச்சோளம் – 20 கிலோ, கம்பு – 15 கிலோ, கேழ்வரகு – 3 கிலோ, அரிசி – 15 கிலோ, கோதுமை தவிடு – 12 கிலோ, கடலைப்பொட்டு – 20 கிலோ, தாது உப்பு ஒன்றரை கிலோ, உப்பு  அரைகிலோ ஆகியவற்றை கலந்து அரைத்துக் கொள்ள வேண்டும். தீவனம் வைப்பதற்கு 12 மணி நேரம் முன்பு 13 கிலோ கடலைப் பிண்ணாக்கை ஊறவைத்து, இக்கலவையுடன் கலந்து முயல்களுக்கு கொடுக்க வேண்டும். இது 100 கிலோ தீவனம் தயாரிப்பதற்கான உதாரண அளவு. எவ்வளவு முயல் இருக்கின்றனவோ.. அதற்கு எற்ற அளவில் தீவனததைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.

முயல் கறியில் உள்ள சத்துக்கள்!
புரதம் - 21%, கொழுப்பு - 11%, நீர்ச்சத்து -68%. 100 கிராம் கறியில்.. 50 மில்லி கிராம் கொழுப்புச் சத்து, 20 மில்லி கிராம் சுண்ணாம்புச் சத்து 40 மில்லி கிராம் சோடியம், 350 மில்லிகிராம் பாஸ்பரஸ் சத்து ஆகியவை இருக்கின்றன.
10 முயல்கள் வளர்க்க முரளிதரன் சொல்லும் ஒரு வருடத்திற்கான செலவு – வரவு கணக்கு
விவரம்
செலவு
வரவு
நிரந்தரச் செலவுகள் (5 ஆண்டுகளுக்கு)

தாய் முயல்
10,000
கூண்டு
8,000
மொத்தம்
18,000
நடைமுறைச் செலவுகள்
அடர் தீவனம்
44,900
பசுந்தீவனம்
2,600
மருத்துவச் செலவு
5,300
முயல் விற்பனை மூலம் வரவு
73,500
மொத்தம்
52,800
73,500
நிகர லாபம்
20,700
தொடர்புக்கு

Govindaraj.S, செல்போன் :+91 8190815622
செம்மறி ஆடுகள் மற்றும் ரோம ஆராய்ச்சி மையம், கொடைக்கானல் : 04542 -276414
வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம் : 044 - 27452371





மனஅழுத்தத்தைக் குறைக்கும் முயல் வளர்ப்பு!

6 மார் DSCN1037
பொசுபொசுவென இருக்கும் நாய்கள், பூனைகளுக்கு அடுத்தபடியாக அதிகமாக விரும்பப்படுவது முயல்கள்தான். வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகளைப் போல அழகாக துள்ளி விளையாடும் முயல்கள் மனஅழுத்தத்தை குறைக்கும் தெரபியாகவும் செயல்படுகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர். துள்ளி விளையாடும் முயல்களின் விடியோ இணைப்பு இங்கே…
எந்த இடத்தில் வளர்ப்பது?
சென்னை போன்ற பெருநகரங்களில் இருப்பவர்கள்கூட முயல் வளர்க்கலாம். அபார்ட்மெண்ட் பால்கனிகளில், மாடிப் படிக்கட்டுகளின் கீழ் பகுதிகளில்கூட வளர்க்கலாம். முயல்கள் வசிப்பதற்கு ஏற்ப இந்த இடங்களை சீர் செய்துகொள்ள வேண்டும். ஓடி விளையாடுவதற்கு சற்றே தோதான இடவசதியும் வெளிச்சமும் இருக்கும்படி அமைக்க வேண்டும். மாடிப் படிக்கட்டுகளில் வளர்க்கப்படும் முயல்கள் வீடியோ இணைப்பைப் பாருங்கள்.
முயல்கள் வசிக்கும் இடங்களை தினமும் சுத்தம் செய்வது அவசியம். வாரம் ஒரு முறை கிருமி நாசினிகளைப் பயன்படுத்தி இடத்தை கழுவ வேண்டும். முயல்களை குளிப்பாட்டி வெயிலில் நிறுத்தி அவற்றை உலர்த்தலாம். இடத்தை சுத்தமாக வைத்துக்கொண்டாலே அவற்றை குளிப்பாட்ட அவசியமில்லை.
அதிகமாக கேரட் தருவது முயல்களின் ஆரோக்கியத்தை குறைக்கும்!
விலங்கின ஆர்வலர் மற்றும் செயல்பாட்டாளரான மேனகா காந்தி, ‘‘முயல்கள் என்றாலே கேரட் மட்டும்தான் சாப்பிடும் என்று இங்கே பொதுவான கருத்து இருக்கிறது. கேரட் மட்டுமே முயல்கள் சாப்பிட்டால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாக சேரும். இது அதனுடைய ஆரோக்கியத்தைத்தான் கெடுக்கும்’’ என்கிறார்.
அதனால் இலை, முட்டை கோஸ் (அல்லது) காலிஃபிளவர் தழை, சிறு தானியங்கள்(கம்பு, கேழ்வரகு), குறைந்த அளவு அரிசி சாதம், குறைந்த அளவு கேரட் போன்றவற்றைத் தரலாம். நீர் சத்துள்ள உணவுகளையே அதிகம் விரும்பி உண்பதால் முயல்கள் குறைந்த அளவே நீர் அருந்தும்.
முயல் வளர்ப்பை பகுதிநேர தொழிலாகவும் செய்யலாம்!
தினம் அரை மணி நேரம் முயல்களுக்காக ஒதுக்கினாலே போதும், முயல் வளர்ப்பு லாபகரமான பகுதி நேர வேலையாக செய்யலாம். ஒரு ஆண் முயல், இரண்டு பெண் முயல் என்ற எண்ணிக்கையில் வளர்த்தால் முயல்களின் இனப்பெருக்க சுழற்சிக்கு ஏற்றபடி முயல்கள் பெருகும். முயல்கள் வளர்ந்து நான்கிலிருந்து 7 மாதத்துக்குள் இனப்பெருக்கத்துக்கு தயாராகிவிடும். சினையான பெண் முயல் 30 நாட்களில் குட்டிகள் ஈனும். ஒரு முறையில் 8 குட்டிகள் வரை பிரசவமாகும். எலிக் குஞ்சுகள் போல இருக்கும் முயல்குட்டிகள் பார்க்கவே கொள்ளை அழகாக இருக்கும்.. குட்டிகள் பிறந்து 1 மாதம் ஆகும்போது, குட்டி ஈன்ற முயல் அடுத்த பிரசவத்துக்கு தயாராகிவிடும்.
முயல்களை விற்பது எப்படி?
DSCN1012
வீட்டில் வளர்க்கும் முயல்களை எப்படி விற்பது என்று நிறைய பேருக்கு தயக்கமாக இருக்கும். நீங்கள் முயல் வளர்ப்பது தெரிந்தால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களே வந்த வாங்கிக்கொள்வார்கள். நிறைய பேர் இறைச்சிக்காக அல்லாமல் வளர்க்கவே வாங்குகிறார்கள்.
முயல் வளர்ப்பு பற்றி தொழில் ரீதியான விவரங்களைத் தெரிந்துகொள்ள சென்னை அருகே உள்ள  காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம். 044 – 27452371. இங்கே முயல்கள் விற்பனைக்கு கிடைக்கும்.
About these ads
 
 
 
 

முயல் வளர்ப்பு

  • குறைந்த இடத்தில் குறைந்த முதலீட்டில் குறுகிய காலத்தில் கணிசமான வருவாய் ஈட்டும் தொழிலாக விளங்கி வருகிறது.
  • சாதாரண தீவனத்தை உட்கொண்டு அதனை சிறந்த இறைச்சியாக மாற்றும் திறன்
  • இறைச்சிக்காகவும், உரோமத்திற்காகவும், தோலுக்காகவும் வளர்க்கலாம்
 நிலமற்ற விவசாயிகள், படிக்காத வேலை இல்லாத இளைஞர்கள் மற்றும் பெண்கள் போன்றோருக்கு முயல் வளர்ப்பு ஒரு பகுதி நேர வருமானம் ஈட்டி தரும் தொழிலாகும்.

 முயல் வளர்ப்பின் பயன்கள் என்ன ?
  • முயல் வளர்ப்பின் மூலம் ஒரு குடும்பத்திற்கு தேவையான தரமான  இறைச்சியை உற்பத்தி செய்து செலவை குறைக்கலாம்
  • முயல்களுக்கு தீவனமாக எளிதில் கிடைக்கும் இலை, தழைகளையும், வீட்டில் வீணாகின்ற காய்கறிகளையும், குறைந்த அளவு தானியங்களையும் கொடுக்கலாம்
  • இறைச்சி முயல்களின் வளர்ச்சி மிக அதிகமாக இருக்கும். இறைச்சி முயல்கள் மூன்று மாத வயதில் 2 கிலோ உடல் எடையை அடைகின்றன.
  • முயல்களின் குட்டி ஈனும் திறன் மிக அதிகம்
  • முயல் இறைச்சியில் மற்ற இறைச்சிகளை விட அதிக அளவு புரதச் சத்தும் (21%) குறைந்த அளவு கொழுப்புச்சத்தும் (8 %) உள்ளது. அதனால் முயல் இறைச்சி குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது


முயல் இனங்கள் மற்றும் கிடைக்குமிடம் 
இறைச்சி வகை இனங்கள்
அதிக எடை உள்ள இனங்கள் (4-6 கிலோ எடை)
  • வெள்ளை ஜெயண்ட்
  • சாம்பல் ஜெயண்ட்
  • பிளமிஸ் ஜெயண்ட்

          வெள்ளை ஜெயண்ட் - அதிக எடையுள்ள இனம் நடுத்தர எடை உள்ள இனங்கள் (3-4 கிலோ எடை)
  1. நியூசிலாந்து வெள்ளை
  2. நியூசிலாந்து சிவப்பு
  3. கலிஃபோர்னியா
குறைந்த எடை உள்ள இனங்கள் (2-3 கிலோ எடை)
  1. சோவியத் சின்சில்லா
  2. டச்சு வகை
Soviet Chincilla.JPG
           சோவியத் சின்சில்லா - குறைந்த எடையுள்ள இனம்
உயர்தர வெள்ளை ஜெயண்ட் மற்றும் சோவியத் சின்சில்லா இனங்கள் கிடைக்குமிடம்
கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல்
04286 -266491, 266492

முயல் வளர்ப்பு முறைகள்
முயல்களை புறக்கடை வளர்ப்பில் வளர்ப்பதற்கு மிகக் குறைந்த செலவில் கொட்டகை அமைத்தால் போதுமானது. முயல்களை கடுமையான வெய்யில் மற்றும் மழை போன்ற தட்பவெப்ப நிலைகளிலிருந்து பாதுகாக்கவும்,  மற்ற விலங்குகளிடமிருந்து (பூனை, கீரி மற்றும் நாய்) பாதுகாக்க கொட்டகை அமைப்பது முக்கியம்.
முயல்களை இரண்டு வகை வீடமைப்பில் வளர்க்கலாம்

தீவன மேலாண்மை
முயல்கள் அனைத்து வகையான தானியங்களையும் (சோளம், கம்பு மற்றும் இதர தானியங்கள்) பயறு வகைகளையும்  (கொண்டை கடலை) நன்றாக சாப்பிடும். மேலும் இலை, பயறு வகை தாவரங்களான குதிரை மசால், முயல் மசால், வேலி மசால், அகத்தி, தட்டைப்பயறு போன்றவற்றையும் சமையலறை கழிவுகளான காய்கறி கழிவுகள் மற்றும் கேரட், முட்டைகோஸ் போன்ற காய்கள் மற்றும் அவற்றினுடைய இலைகளை விரும்பி உண்ணும்.
முயல்களின் உணவில் இருக்கவேண்டிய சத்துக்கள்

சத்துகளின் விபரம்
வளர்ச்சிக்கு
பராமரிப்பிற்கு
சினைக்கு
பால் சுரப்பிற்கு
செரிமானம் ஆக்கூடிய எரிசக்தி (கிலோ கலோரி)
2500
2300
2500
2500
புரதச்சத்து(%)
18
16
17
19
நார்ச் சத்து(%)
10-12
12-14
10-12
10-12
கொழுப்பு சத்து(%)
2
2
2
2
தீவன மேலாண்மையில் கவனிக்க வேண்டியவை
  • முயல்களின் பற்கள் வளர்ந்து கொண்டே இருக்கும். எனவே அவற்றை அடர் தீவனம் மட்டும் கொண்டு வளர்க்க முடியாது
  • முயல்களுக்கு சரியான நேரத்தில் தீவனம் கொடுக்க வேண்டும். நேரம் தவறினால் முயல்கள் பரபரப்படைந்து உடல் எடை குறையும்
  • முயல்கள் பகல் நேரங்களில் அதிக வெப்பநிலை காரணமாக தீவனம் சாப்பிடாமல் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும். மேலும் இரவு நேரங்களில் அவை சுறுசுறுப்பாக இருக்கும். எனவே பசுந்தீவனங்களை இரவு நேரங்களில் தீவனம் அளிப்பது முயல்கள் அவற்றை வீணாக்காமல் சாப்பிடுவதற்கு ஏதுவாகும். முயல்களின் இந்த பழக்கத்தால்  அடர் தீவனத்தினை காலை நேரங்களில் அளிக்கலாம்
  • அடர் தீவனத்தினை குச்சி தீவனமாக அளிக்கலாம். குச்சி தீவனம் கிடைக்காத இடங்களில் தூள் தீவனத்தினை தண்ணீரில் பிசைந்து சிறிய உருண்டைகளாக கொடுக்கலாம்
  • ஒரு கிலோ எடையுள்ள முயலுக்கு நாள் ஒன்றுககு 40 கிராம் அடர் தீவனமும் 40 கிராம் பசுந்தீவனமும் கொடுக்கவேண்டும்
  • முயல்களுக்கு பசுந்தழைகளை புதிதாக அளிக்க வேண்டும். வாடிய தழைகளை  முயல்கள் விரும்பி உண்ணாது. தரையில் பசுந்தழைகளை போடாமல் பக்க வாட்டில் சொருகி வைப்பது முயல்கள் அவற்றை நன்கு சாப்பிடும்
  • சுத்தமான சுகாதாரமான குடிநீர் முயல்களுக்கு 24 மணி நேரமும் கிடைக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்
வகை
தோராயமான உடல் எடை
தீவன அளவு ஒரு நாளுக்கு
கலப்பு தீவனம்
பச்சை காய்கறி
வளர்ந்த ஆண் முயல்
4-5 கிலோ
100 கிராம்
250 கிராம்
வளர்ந்த பெண் முயல்
4-5 கிலோ
100 கிராம்
300  கிராம்
பால் கொடுக்கும் முயல் மற்றும் சினை முயல்கள்
4-5 கிலோ
150 கிராம்
350 கிராம்
குட்டிகள்
600-700 கிராம்
50-75 கிராம்
150 கிராம்
மாதிரி அடர் தீவனக்கலவை

மூலப்பொருட்கள்
அளவு
உடைத்த மக்காச்சோளம்
30 பாகம்
உடைத்த அரைத்த கம்பு
30 பாகம்
கடலைப்பிண்ணாக்கு
13 பாகம்
கோதுமைத் தவிடு
25 பாகம்
தாது உப்புக் கலவை
1.5 பாகம்
உப்பு
0.5 பாகம்
முயல்களின் இனப்பெருக்க மேலாண்மை
இனப்பெருக்க வயது
  • பெண்முயல் - 5-6 மாதங்கள்
  • ஆண் முயல்-  5-6 மாதங்கள் (ஆண்முயல்களும் 5-6 மாதங்களில் பருவத்தினை அடைந்தாலும் ஒரு ஆண்டிற்குப் பிறகு இனவிருத்திக்கு பயன்படுத்தினால் அதிகப்படியன தரமான குட்டிகள் கிடைக்கும்)
இனவிருத்திக்கான முயல்கள் தேர்வு செய்யும் முறைகள்
  1. முயல்களை 5 முதல் 8 மாத வயதில் அதன் முழு உடல் எடையினை அடைந்த பின்பே இனவிருத்திக்காக தேர்வு செய்ய வேண்டும்
  2. இனவிருத்திக்காக தேர்வு செய்யப்படும் ஆண் மற்றும் பெண் முயல்கள் அதிக குட்டிகள் ஈனப்பட்ட ஈற்றிலிருந்து தேர்ந்தெடுக்க வேண்டும்
  3. நல்ல ஆரோக்கியமான முயல்களையே இனவிருத்திக்காக தேர்வு செய்ய வேண்டும். ஆரோக்கியமான முயல்கள் நல்ல சுறுசுறுப்புடன் நன்கு உணவு உண்பதுடன் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும். மேலும் ஆரோக்கியமான முயல்கள் தங்கள் உடல் பகுதியினை சுத்தமாக வைத்திருக்கும். அவற்றின் உரோமம் சுத்தமாகவும் பளபளப்பாகவும், மென்மையாகவும் இருக்கும்.
  4. ஆண் முயல்களை தேர்வு செய்யும் போது மேற்கூறிய பண்புகளுடன் அதன் விதைப்பையில் இரண்டு நன்கு வளர்ந்த விதைகள் உள்ளனவா என்பதனை பார்த்தே வாங்க வேண்டும்
  5. ஆண்முயல்களை தேர்வு செய்யும் பொழுது பெண் முயல்களுடன் இனச்சேர்க்கை செய்வதன் மூலம் அதன் ஆண்மை பண்பினை ஓரளவிற்கு அறியலாம்

பெண் முயலின் சினைப்பருவ அறிகுறிகள்
பொதுவாக முயல் இனங்களில் சினைப்பருவ சுழற்சி காணப்படுவதில்லை. எப்பொழுதெல்லாம் பெண் முயல் ஆண்முயலினை இனச்சேர்க்கைக்கு அனுமதிக்கிறதோ அப்பொழுது அவை சினைப்பருவத்தில் உள்ளதாக கணக்கில் கொள்ள வேண்டும். சில சமயங்களில் பெண்முயலின் சிவந்த பெண் குறிகள் அவை சினைப்பருவத்தில் உள்ளதை குறிக்கும்.  ஆண்முயலுடன் பெண் முயலை அருகில் வைக்கும் போது பெண் முயல்கள் சினைப்பருவத்திலிருந்தால் அதன் முதுகு நடுப்புறம் வளைந்து உடலின் பின் பகுதி உயர்ந்த நிலையில் நிற்கும். அதே சமயம் பெண் முயல்கள் சினைப்பருவத்தில் இல்லாவிடில் உடல் குறுகி கூண்டின் ஒரு மூலையில் அமர்ந்து விடும். சில சமயங்களில் பெண் முயல்கள் ஆண் முயல்களை தாக்கத் துவங்கும்



பெண் முயலின் சினைப்பருவ அறிகுறிகள்
பொதுவாக முயல் இனங்களில் சினைப்பருவ சுழற்சி காணப்படுவதில்லை. எப்பொழுதெல்லாம் பெண் முயல் ஆண்முயலினை இனச்சேர்க்கைக்கு அனுமதிக்கிறதோ அப்பொழுது அவை சினைப்பருவத்தில் உள்ளதாக கணக்கில் கொள்ள வேண்டும். சில சமயங்களில் பெண்முயலின் சிவந்த பெண் குறிகள் அவை சினைப்பருவத்தில் உள்ளதை குறிக்கும்.  ஆண்முயலுடன் பெண் முயலை அருகில் வைக்கும் போது பெண் முயல்கள் சினைப்பருவத்திலிருந்தால் அதன் முதுகு நடுப்புறம் வளைந்து உடலின் பின் பகுதி உயர்ந்த நிலையில் நிற்கும். அதே சமயம் பெண் முயல்கள் சினைப்பருவத்தில் இல்லாவிடில் உடல் குறுகி கூண்டின் ஒரு மூலையில் அமர்ந்து விடும். சில சமயங்களில் பெண் முயல்கள் ஆண் முயல்களை தாக்கத் துவங்கும்.


இனச்சேர்க்கை
முயல்களுக்கான சில இனவிருத்தி விபரங்கள்
ஆண் பெண் விகிதம் 1:10
முதல்இனச்சேர்க்கையின்போதுவயது 5-6 மாதங்கள்
முதல்இனச்சேர்க்கையின்போதுதாயினுடையஉடல்எடை 2.25 முதல் 2.5 கிலோ
சினைப்பருவம் 28-31 நாட்கள்`
தாயிடமிருந்துகுட்டிகளைப்பிரிக்கும்வயது 6 வாரங்கள்
குட்டிபோட்டபின்புமீண்டும்இனச்சேர்க்கைக்குஅனுமதித்தல் 6 வாரங்களுக்குப்பின் குட்டிகளைப் பிரித்த பின்பு
விற்பனைவயது 12 வாரங்கள்
விற்பனையின்போதுஉடல்எடை சுமார் 2 கிலோ அல்லது மற்றும் அதற்கு மேல்
சினை அறிகுறிகள் காணப்படும் பெண் முயலின் ஆண் முயல் இருக்கும் கூண்டிற்கு எடுத்துச்சென்று இனச்சேர்க்கைக்கு விட வேண்டும். சரியான பருவத்தில் இருக்கும் பெண் முயல் வாலை தூக்கி ஆண் முயலினுடைய இனச்சேர்க்கையினை ஏற்றுக்கொள்ளும். இனச்சேர்க்கை நடந்தவுடன் ஆண் முயல் 'கிரீச்' என்ற சப்தமிட்டு ஒருபுறமாகவோ அல்லது பின்புறமாகவோ விழும். இதுவே சரியான இனச்சேர்க்கையினுடைய அறிகுறியாகும். ஒரு ஆண் முயலினை ஒரு வாரத்தில் 3 முதல் 4  நாட்களுக்கு மேல் இனச்சேர்க்கைக்கு பயன்படுத்தக்கூடாது. அதை போல் ஆண் முயலினை ஒரே நாளில் 2 அல்லது 3 முறைக்கு மேல் இனவிருத்திக்கு பயன்படுத்தக்கூடாது. ஆண் முயல்களுக்கு போதுமான ஓய்வும் நல்ல சத்தான உணவும் சிறப்பான இனச்சேர்க்கைக்கு அவசியமாகும். பண்ணையில் 10 பெண் முயல்களுக்கு 1 ஆண் முயல் என்ற விகிதத்தில் வைத்திருக்க வேண்டும். ஓரிரு அதிகப்படியான ஆண் முயல்கள் வைத்திருப்பது நல்லது. ஏனெனில் இனவிருத்தி சமயங்களில் ஆண்முயல்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் இந்த முயல்களை மாற்றாக பயன்படுத்திக்கொள்ளலாம்

இறைச்சி முயலின் சினைக்காலம் - 28 -31 நாட்கள் ஆகும். இனச்சேர்க்கை செய்த நாளிலிருந்து 12 முதல் 14 வது நாளில் முயலின் அடிவயிற்றினை தடவிப்பார்த்து சினைப்பட்டதை அறியலாம். இதற்காக தாய் முயல் கூண்டின் மேல் வைத்து அது அமையதியடைந்த பின்னர், பின் கால்களுக்கு இடையில் வயிற்றப்பகுதியில் கை விரல்களால் மெதுவாக தடவிப்பார்த்தால் சிறிய நெல்லிக்கனி போன்ற உருண்டையான சதைக்கோளம் விரல்களில் தட்டுப்பட்டால் சினைப்பட்டதை உறுதி செய்யலாம். பதிநான்காம் நாள் சினை இல்லா முயல்களை மீண்டும் இனச்சேர்க்கை செய்ய வேண்டும். மூன்று முறைக்கு மேல் இனச்சேர்க்கை செய்த பின்னும் சினைப்படாத முயல்களை பண்ணையிலிருந்து நீக்கி விட வேண்டும்.

சினைப்பட்ட முயல்களின் உடல் எடை சிறிது அதிகரித்து கணப்படும். சினைப்பட்ட 25 நாட்களுக்குப்பின் 500 முதல் 700 கிராம் வரை அதிகரித்து காணப்படும். இந்த எடை அதிகரிப்பினை முயல்களை தூக்கும் போதே உணரலாம். சினைப்பட்ட முயல்களை இனச்சேர்க்கை செய்யும் போது இனச்சேர்க்கையாகாது.

சினை முயல்களை பராமரிக்கும் முறைகள்
பதிநான்காம் நாள் சினை பரிசோதனையில் சினை என்று உறுதி செய்யப்பட்ட முயல்களுக்கு அதன் தீவனத்தின் அளவினை தினசரி100 கிராம் என்ற அளவில் இருந்து 150 கிராம் என்ற அளவிற்கு அதிகரிக்க வேண்டும். இனச்சேர்க்கை செய்த நாளிலிருந்து 25 வது நாளிலிருந்து குட்டி போடும் கூண்டிற்கு மாற்ற வேண்டும். குட்டி போடுவதற்கு 5 நாட்களுக்கு முன்பே குட்டி போடும் பெட்டியினை கூண்டில் வைக்க வேண்டும். நன்கு வெய்யிலில் காய்ந்த தேங்காய் நார் அல்லது வைக்கோலினை குட்டி போடும் பெட்டியில் வைக்க வேண்டும். தாய் முயல்கள் இந்த நார் பொருட்களுடன்  குட்டி போடுவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பாக தன் அடிவயிற்றிலுள்ள பஞ்சு போன்ற உரோமத்தினை பிடுங்கி குட்டி போடுவதற்கான ஒரு கூட்டினை அமைக்கும். இந்த நேரத்தில் முயல்களை தொந்தரவு செய்யக்கூடாது. வெளிஆட்களை குட்டி போடும் பகுதிக்கு செல்ல அனுமதிக்கக்கூடாது.
பெரும்பாலும் அதிகாலை வேலைகளில் தான் முயல்கள் குட்டி போடும். சராசரியாக 15 முதல் 30 நிமிடங்களில் முயல்கள் குட்டிகளை ஈன்று விடும். தாய் முயல்களே குட்டிகளை சுத்தம் செய்து விடும். தாய் முயல்கள் குட்டிகளை பராமரிக்கும் பணியினை அதிகாலையிலேயே செய்து விடும். குட்டி போடும் பெட்டியினை தினமும் காலையில் சோதனை செய்ய வேண்டும். சோதனை செய்யும் போது குட்டிகள் இறந்திருந்தால் அவற்றினை உடனே அப்புறப்படுத்தி விட வேண்டும். சோதனையின் போது தாய் முயல் பரபரப்படையும். எனவே தாய் முயலினை சோதனையின் போது அப்புறப்படுத்தி விடுவது நல்லது.

பிறந்த முயல் குட்டிகள் பராமரிப்பு
பிறந்த குட்டிகள் கண் மூடி உரோமமில்லாமல் இருக்கும். அவை குட்டி ஈனும் பெட்டிக்குள் தாய் முயலால் உருவாக்கப்பட்ட உரோம மெத்தையில் ஒன்றாக படுத்திருக்கும். தாய் முயல் சராசரியாக ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே பால் கொடுக்கும். பொதுவாக அதிகாலை நேரத்தில் தாய் முயல்கள் பால் கொடுக்கும். வலுக்கட்டாயமாக நாம் பாலூட்டச்செய்தால் முயல்களில் பால் சுரப்பு இருக்காது. நன்கு பால் குடித்த குட்டிகள் தோல் சுருக்கமின்றி மினுமினுப்பாக காணப்படும். சரியாக பால் குடிக்காத குட்டிகள் தோல் வறண்டு சுருக்கமாகவும் உடல் வெப்பம் குறைந்து சோம்பலுடனும் காணப்படும்.

செவிலித்தாய் வளர்ப்பு முறை
சாதாரணமாக ஒரு முயலில் 8 முதல் 12 பால் காம்புகள் இருக்கும். இக்காம்புகளின் எண்ணிக்கைக்கு மேல் குட்டிகள் ஈனப்படும்போது சரிவர பால் கிடைக்காமல் குட்டிகள் இறக்கும் வாய்ப்புகள் அதிகம். மேலும் தாய் முயல்கள்  குட்டிகள் ஈன்ற பின்பு இறந்து விடுதல், தாய்மை பண்பற்ற தாய்க்கு பிறந்த குட்டிகள் மற்றும் கூண்டினை விட்டு கீழே விழுந்த குட்டிகள் எந்த தாய்க்குரிய குட்டி என்பதில் சந்தேகம் ஏற்படும் தருணங்களில் குட்டிகள் செவிலித்தாய் மூலம் வளர்க்கலாம்.



குட்டிகளை செவிலித்தாய்க்கு மாற்றும் போது கவனிக்கவேண்டியவை
  • ஒரு செவிலித்தாய்க்கு மூன்று குட்டிகளுக்கு மேல் மாற்றக்கூடாது
  • பிறந்த குட்டிகளுக்கும் செவிலித்தாயின் குட்டிகளுக்கும் வயது வித்தியாசம் 48 மணி நேரத்திற்கு மேல் இருக்கக்கூடாது
 
குட்டிகளை தாயிடம் இருந்து பிரித்தல்
இளங்குட்டிகள் பொதுவாக 3 வாரங்களுக்கு குட்டி போடும் பெட்டியினுள் இருக்க வேண்டும். அதன்பின் பெட்டியினை எடுத்து விடலாம்.  சுமார் 4 முதல் 6 வார வயதில் குட்டிகளை தாயிடமிருந்து பிரிக்க வேண்டும். குட்டிகளை பிரிக்கும் போது தாய் முயல்களை பிரித்துவிட்டு குட்டிகளை அதே பெட்டியில் மேலும் ஓரிரு வாரங்கள்  வைத்திருந்து அதன் பின் பாலின வாரியாக பிரித்து ஒரு கூண்டு அறைக்கு  இரண்டு குட்டிகள் வீதம் வைத்து வளர்க்க வேண்டும். தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட குட்டிகளுக்கான உணவில் திடீரென மாற்றங்கள் செய்யக்கூடாது.
 
இளங்குட்டிகளில் இறப்பு விகிதத்தினை குறைக்கும் முறைகள்
குட்டிகள் பிறந்த நாள் முதல் 15 நாட்கள் வரை தாயின் பராமரிப்பில் வளரும். அதற்கு தாய்ப்பால் மட்டுமே உணவாக இருக்கும்.  இக்கால கட்டங்களில் குட்டிகளின் இறப்பிற்கு பெரும்பாலும் தாய் முயல் காரணமாக இருக்கும். பதினைந்து நாட்களுக்குப் பிறகு குட்டிகள் உணவு மற்றும் குடிநீரனை சாப்பிட துவங்கும் போது நோய்கள் பரவ வாய்ப்பாகிறது. குடிநீர் மூலம் பரவும் நோய்களே அதிகம். எனவே நன்கு கொதிக்க வைத்து சூடு ஆறிய குடிநீரினை குட்டிகளுக்கு கொடுக்க வேண்டும். குடிநீரில் ஹைட்ரஜன் பெராக்ஸைடு கலவையினை 10 லிட்டர் குடிநீருக்கு ஒரு மில்லி என்ற விகிதத்தில் கலந்து 20 நிமிடங்களுக்கு பின்பு பெரிய மற்றும் குட்டி முயல்களுக்கு அளிப்பதை வழக்கமாக கொள்ள வேண்டும்.
 
ஆரோக்கியமான முயல்களின் அறிகுறிகள்
  • தோல் மற்றும் உரோமம் பொலிவுடன் காணப்படும்
  • ஓரிடத்தில் நில்லாமல் துறுதுறுவென்று இருக்கும்
  • தீவனம் போட்டவுடன் உடனே தின்று விடும்
  • கண்கள் பளபளப்புடனும் எவ்வித நீர்க்கசிவுகளும் இன்றி காணப்படும்
  • முயல்களின் புழுக்கைகள் ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்கும்
  • முயல்களினுடைய உடல் எடை சீராக அதிகரிக்கும்
 
நோயுற்ற முயல்களின் அறிகுறிகள்
  • சோர்வாகவும் தளர்ச்சியுடனும் காணப்படும்
  • முயல்கள் மெலிந்து எலும்பும் தோலுமாக காணப்படும்
  • அதிகமாக முடி கொட்டல் காணப்படும்
  • முயல்கள் அங்கும் இங்கும் திரியாமல் ஒரே இடத்தில் அடைந்து காணப்படும்
  • முயல்களின் தீவனம் எடுக்கும் அளவு குறைவாக காணப்படும்
  • முயல்களின் மூக்கு, வாய், மலத்துவாரம் மற்றும் கண்களிலிருந்து நீர் அல்லது சளி போன்ற திரவம் வடிந்து கொண்டிருக்கும்
  • உடல் வெப்பநிலை அதிகரித்து வேகமாக மூச்சு விட்டுக்கொண்டு இருக்கும்
 
ஆரோக்கியமான முயல்களின் அறிகுறிகள்
  • தோல் மற்றும் உரோமம் பொலிவுடன் காணப்படும்
  • ஓரிடத்தில் நில்லாமல் துறுதுறுவென்று இருக்கும்
  • தீவனம் போட்டவுடன் உடனே தின்று விடும்
  • கண்கள் பளபளப்புடனும் எவ்வித நீர்க்கசிவுகளும் இன்றி காணப்படும்
  • முயல்களின் புழுக்கைகள் ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்கும்
  • முயல்களினுடைய உடல் எடை சீராக அதிகரிக்கும்


நோயுற்ற முயல்களின் அறிகுறிகள்
  • சோர்வாகவும் தளர்ச்சியுடனும் காணப்படும்
முயல்களில் ஏற்படும் நோய்கள்
நீர்க்கோப்பு நோய்

கழுத்துக்கோணல் நோய்

கழிச்சல் நோய்

மடி நோய்

பூஞ்சைகளால் ஏற்படும் நோய்கள்

நோயினைத் தடுக்க முயல் பண்ணை சுகாதாரம்

  • முயல்கள் மெலிந்து எலும்பும் தோலுமாக காணப்படும்
  • அதிகமாக முடி கொட்டல் காணப்படும்
  • முயல்கள் அங்கும் இங்கும் திரியாமல் ஒரே இடத்தில் அடைந்து காணப்படும்
  • முயல்களின் தீவனம் எடுக்கும் அளவு குறைவாக காணப்படும்
  • முயல்களின் மூக்கு, வாய், மலத்துவாரம் மற்றும் கண்களிலிருந்து நீர் அல்லது சளி போன்ற திரவம் வடிந்து கொண்டிருக்கும்
  • உடல் வெப்பநிலை அதிகரித்து வேகமாக மூச்சு விட்டுக்கொண்டு இருக்கும்
 
நன்றி :http://www.indg.in/agriculture/on-and-off-farm-enterprises/ooTM-of7s1
 
வாழ்க்கைக்கு தேவையான பல நல்ல தகவல்களும், சமுதாயம் சார்ந்த விழிப்புணர்வுகளும், அனைவருக்கும் சென்றடைவது எப்போது? பதிவை வாசிக்கும் உங்கள் கையில் தான் இருக்கிறது . உங்கள் கருத்துகளே என்னை மேலும் செயல்படத் தூண்டும்!!! ஆரோக்கியமான விவாதத்திற்கு வழிவகுக்கும் எதிர்கருத்து உட்பட அனைத்து கருத்துகளும் (தமிழில்) வரவேற்கப்படுகின்றன.
 

5 comments:

  1. dear sir
    i arun from kanyakymari . i completed B.E . i want start rabbit farm business . in our area marketing is very difficult. i have many doubt in the field so pls help me sir my mail id sbacse@ymail.com

    ReplyDelete
  2. Am looking for rabbits on below details
    Pregnant Female 1 No
    4 Month Old Female 2
    8-10 Month Old Male 1 No
    1 KG size Male 2 No
    1 KG size Female 4 No
    I need pure breed no cross .(White ,Grey,Giant) Newzeland and soviet chinchilla

    give me your best price ..

    Regards
    Lakshminarayanan J.

    ReplyDelete
  3. Sir,
    Am thamim. I want to make a rabbits farm but I buy rabbits in market that rabbits not eat suddenly weight loss so that anyone have good breed rabbits I buy it contact me

    ReplyDelete
  4. I hope this message finds you well. I am reaching out to you because I am currently seeking a new and caring home for my beloved rabbit.



    About My Rabbit:

    Breed: White Gaint,Balck Gaint,Netharland Dwart,Flemish Gaint,English Spot,Duch Havana,Soviet Chinchilla

    Age: 1 month

    Gender: Male/Female

    Color: cream, frosty, chinchilla, chestnut, opal, sable point, black tort, blue tort, chocolate tort, lilac, black, blue, chocolate, blue eyed white (BEW), ruby eyed white (REW), magpie, tri-color,

    Personality: Curious,Playful,Clean,Bonding,Vocal,Social

    Contact : 8122815756
    Instagram : https://www.instagram.com/invites/contact/?i=aewm7goo1p98&utm_content=sfcx8cs
    Email : littlerabbit598@gmail.com

    ReplyDelete